கத்தாரில் இந்தியர்கள் க்யூஆர் கோடை பயன்படுத்தி, யுபிஐ மூலம் பணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இதையொட்டி, தேசிய பணம் செலுத்துகை கழகம் கத்தார் தேசிய வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதன்மூலம் கத்தாருக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள் எளிமையான முறையில் பணம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளுக்கு நிகழாண்டில் மட்டும் 90 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் பயணம் மேற்கொள்வதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.