தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பாஜக சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
மந்திதோப்பு பகுதியில் உள்ள கதிர்வேல் நகர், அன்னை தெரசா நகர் பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு செல்லும் சாலைகள் மிகவும் பழுதடைந்து உள்ளதாகவும், தெருவிளக்கு மற்றும் வடிகால் வசதி உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை எனவுகூறி பாஜகவினர் மற்றும் அப்பகுதி மக்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு வழங்கினார்.