நாட்டில் வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் 300 விமான நிலையங்களை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது 138 விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. பயணிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருவதால், அதை ஈடுசெய்யும் வகையில் 2047-க்குள் விமான நிலைய எண்ணிக்கையை இரட்டிப்பாக்க விமான நிலையங்கள் ஆணையம் பரிசீலித்து வருகிறது.
2047-க்குள் பயணிகளின் எண்ணிக்கை எட்டு மடங்கு அதிகரிக்கக் கூடும் என்பதால், 300 விமான நிலையங்களை உருவாக்க விமான நிலையங்கள் ஆணையம் திட்டம் வகுத்து வருகிறது.