விமானப் படையிடம் எல்சிஏ மார்க் 1ஏ ரக போர் விமானம் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் ஒப்படைக்கப்படும் என ஹிந்துஸ்தான் ஏநாட்டிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு படைகளுக்கு தேவையான தளவாடங்கள், உதிரி பாகங்களை ஹிந்துஸ்தான் ஏராநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
அந்த வகையில், எல்சிஏ மார்க் 1ஏ ரக போர் விமானத்தை கடந்த மார்ச் மாதமே விமான படையிடம் ஒப்படைக்க அந்த நிறுவனம் முடிவு செய்திருந்தது.
இருப்பினும் மென்பொருள் ஒருங்கிணைப்பில் பிரச்சினை ஏற்பட்டதால் இதில் தாமதம் ஏற்பட்டது. எனவே ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் எல்சிஏ மார்க் 1ஏ ரக போர் விமானம், விமானப் படையிடம் ஒப்படைக்கப்படும் என ஹிந்துஸ்தான் ஏராநாட்டிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.