செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மழுவங்கரனை பகுதியை சேர்ந்த தேவன், அவருடைய விளைநிலத்தில் மரக்கட்டையில் இருந்து கரி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் பணி முடிந்தவுடன் கூலிக்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தன் நிலத்திலேயே சாராயம் காய்ச்சி அதனை வழங்கி வந்துள்ளார்.
இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 லிட்டர் ஊரல் மற்றும் 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து தேவனை கைது செய்தனர்.
இந்நிலையில் அங்கு சாராயம் அருந்திய அய்யனார், பெருமாள், மணி ஆகிய 3 பேருக்கு ஏற்கனவே உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து தற்போது மேலும் இருவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மதுரை, ராதாகிருஷ்ணன் ஆகிய இருவர் உள்பட 5 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.