திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பல்லி விழுந்த சட்னியை சாப்பிட்ட 3 குழந்தைகள் உள்ளிட்ட 8 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
பத்தாபேட்டை பகுதியில் சுபாஷ் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இவருடைய கடையில் இட்லி, சட்னி சாப்பிட்ட 3 குழந்தைகள் உள்ளிட்ட 8 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சட்னியில் பல்லி விழுந்தது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட 8 பேரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.