கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அறுவடை செய்த வாழைத்தார்களை எடுத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, பவானி ஆற்றின் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், அறுவடை செய்த வாழைத்தார்களை விவசாயிகள் பரிசல் கட்டி ஆற்றைக் கடந்து எடுத்து செல்கின்றனர். நீர் மட்டம் மேலும் அதிகரித்தால் வாழைகளைக் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படும் என்பதால், விவசாயிகள் தீவிரமாக அறுவடை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.