திருச்சியில் மாநகராட்சி குப்பை லாரி மீது மின்கம்பி மோதியதில் தீவிபத்து ஏற்பட்டது.
எடமலைப்பட்டி புதூர் பசுமை பூங்காவில், நுண் உர செயலாக்க மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்துக்கு குப்பைகளை கொட்ட சென்ற மாநகராட்சி குப்பை லாரி மின்கம்பியில் உரசியதில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதனைக் கண்ட ஊழியர்கள் லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.