ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவன பெண் ஊழியருக்கு சிஐஎஸ்எஃப் வீரர் பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த பெண் ஊழியரிடம் விமான நிலைய அனுமதி சீட்டு இருந்தபோதிலும், சிஐஎஸ்எஃப் வீரர் அவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக தெரிகிறது. இதனால் அந்த சிஐஎஸ்எஃப் வீரர் மீது உள்ளூர் காவல் நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் புகார் அளித்துள்ளது.