ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் தொடங்கியுள்ள ஆர்எஸ்எஸ் மாநாட்டில், நாடு முழுவதும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் மாநாடானது மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டு பிராந்திய தலைவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும், சமுதாய மாற்றத்திற்காக ஆர்.எஸ்.எஸ். மேற்கொண்டுள்ள 5 செயல் திட்டங்கள் பற்றியும், நாடெங்கிலும் நடந்து முடிந்துள்ள முகாம்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
இதில், அகில பாரத பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசாபலே,அனைத்து அகில பாரத பொறுப்பாளர்கள், பரிவார் அமைப்புகளின் அகில பாரத அமைப்பு பொதுச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் மாநில அமைப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இன்று தொடங்கி வரும் 14ஆம் தேதி மாலை 6 மணி வரை இந்த மாநாடானது நடைபெறுகிறது. விரைவில் மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆர்எஸ்எஸ் மாநாடு ராஞ்சியில் நடைபெறுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.