திருப்பத்தூரில் தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்பு பணி நடைபெறும் நிலையில் எச்சரிக்கை பலகை வைக்காததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
நாட்றம்பள்ளி பகுதியில் பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தார் சாலை பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து எச்சரிக்கை பலகை வைக்காததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், விபத்தை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு எச்சரிக்கை பலகை வைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.