ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அக்னூர் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக சிலரது நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அங்கு பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் அண்மையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில், அக்னூர் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக சிலர் நடமாடியதாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
இதன்பேரில், அப்பகுதியில் போலீஸாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர். மேலும், ஜம்மு-அக்னூர் நெடுஞ்சாலையில் வாகனங்கள் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன.