கர்நாடகா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து, தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 7 ஆயிரத்து 507 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த தண்ணீர் நாளை காலை முதல் தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி வரும் நாட்களில் மழையின் காரணமாக காவிரியில் கூடுதலாக தண்ணீர் திறந்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.