நடப்பு நிதியாண்டில் இந்தியா 7 சதவீதம் GDP வளர்ச்சியைக் காணும் என நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி தெரிவித்துள்ளார்.
இந்த வளர்ச்சி விகிதம் பல ஆண்டுகளுக்கு 0.5 சதவீதம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ தொடர்ந்து நீடிக்கும் எனவும் அவர் கணித்துள்ளார்.
அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் குறையத் தொடங்கியவுடன், இந்தியா உட்பட வளர்ந்து வரும் சந்தைகளில் அன்னிய நேரடி முதலீடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம், இந்திய ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தை 7.2 சதவீதமாக நிர்ணயித்தது.