மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் விவசாயிகளை மிரட்டியதாக ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் பெற்றோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே பயிற்சியில் இருந்துவந்த ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த நிலையில், புனே மாவட்டம் முல்ஷி தாலுகா தாட்வாலி கிராமத்தில் விவசாயிகளை மிரட்டியதாக பூஜா கேத்கரின் பெற்றோர் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
விவசாய நிலத்தை அபகரிக்கும் நோக்கில், தனிப்பட்ட பாதுகாவலர்களுடன் சென்று விவசாயிகளை பூஜா கேத்கரின் தாய் மனோரமா கடுமையான வார்த்தைகளால் பேசியதுடன், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் தெரிகிறது. இதுதொடர்பான புகாரின்பேரில் மனோரமா, அவரது கணவர் திலீப் கேத்கர் உள்ளிட்ட ஏழு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.