உலக ஆடியோ விஷுவல் & என்டர்டெயின்மென்ட் உச்சிமாநாடு (WAVES) நவம்பர் 20 முதல் 24, 2024 வரை கோவாவில் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், உலக ஆடியோ விஷுவல் & என்டர்டெயின்மென்ட் உச்சிமாநாடு (WAVES) நவம்பர் 20 முதல் 24, 2024 வரை கோவாவில் நடைபெறுகிறது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்க உலகெங்கிலும் உள்ள தொழில் வல்லுநர்கள் மற்றும் சிந்தனைத் தலைவர்களை ஒன்றிணைக்கும் என அவர் கூறியுள்ளார்.
இது படைப்பாற்றல் மற்றும் புதுமைகளின் துடிப்பான சுற்றுச்சூழல் அமைப்பை வளர்க்கும் என்றும், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறைக்கு ஒரு முக்கிய நிகழ்வு என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.