ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே 53 லட்ச ரூபாய் ஹவாலா பணத்தை கொண்டு சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காந்தி நகர் சோதனைசாவடியில் மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேரிடம் போலீசார் சோதனை நடத்தினர்.
அதில் அவர்கள் சுமார் 52 லட்சம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக பிரபாகரன், பன்னீர், கவிதாஸ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.