டொனால்ட் டிரம்ப் மீதான கொலை முயற்சி, பிரதமர் மோடிக்கு எதிரான தாக்குதலை நமக்கு நினைவூட்டுகிறது. உலக தலைவர்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் தற்போது அதிகரித்துள்ளது. இது குறித்து இதில் காண்போம்…
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காதில் காயமடைந்த ட்ரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாடாளுமன்ற மேலவைக்கான தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது திடீரென துப்பாக்கியால் மர்ம நபர் ஒருவர் சுட்டதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார்.
ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வருகை தந்த போது துப்பாகி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பிரதமரை நோக்கி 4 முறை சுட்டுள்ளார். இதில் ஒரு குண்டு பிரதமர் ராபர்ட் ஃபிகோவின் அடிவயிற்றில் பாய்ந்தது. பின்னர் அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். இரண்டுமாத சிகிச்சைக்கு பின்னர் ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ தனது பணிகளை தொடங்கினார்.
பிரதமர் மோடியின் மீது இரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு, பிரதமர் வேட்பாளராக இருந்த நரேந்திர மோடியை குறிவைத்து, பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம் (சிமி) தாக்கியபோது, நடந்த கொடூரமான நினைவுகளை மீண்டும் நினைவுக்கு வருகிறது.
கடந்த 2022 ஜனவரி 6 ஆம் இந்திய பிரதமர் நரேந்திர மோதி பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றபோது அங்கு அவர் சென்ற பாதையை போராட்டக்காரர்கள் வழிமறித்து சாலை மறியல் செய்ததால் பதற்றம் ஏற்பட்டது. பிரதமரின் வாகன தொடர் இதனால் மேம்பாலம் ஒன்றில் சுமார் 20 நிமிடங்கள் சிக்கிக் கொண்ட நிகழ்வு, கடுமையான பாதுகாப்புக் குறைபாடு என்று இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதனை காங்கிரஸ் கண்டிக்காமல் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. பிரதமர் மோடிக்கு தீங்கு விளைவிக்கும் முயற்சிகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து கேலி செய்தும், கொண்டாடியது.
தற்போது பிரதமர் மோடிக்கு எதிராக சரமாரியான வன்முறைச் சொற்பொழிவுகளைக் காண்கிறோம். நாட்டின் தேசியத்தை போற்றி பாதுகாக்கும் தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது.
பிரதமர் மோடியின் கடந்த 10 ஆண்டு ஆட்சியில், தலைவர்களுக்கான தாக்குதல் தொடர்ந்து தடுக்கப்பட்டு முறியடிக்கப்படுகிறது. இனிவரும் வரும் காலங்களிலும் இது போன்ற செயல்கள் நம் நாட்டில் முறியடிக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்கிறார்கள்.