உத்தர பிரதேசத்தில் மின்னலை முன்கூட்டியே கண்டறியும் கருவியை மூன்று இடங்களில் பொருத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அம்மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மின்னல் தாக்கி 84 பேர் உயிரிழந்தனர். அதிலும் 43 பேர் 24 மணிநேரத்தில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில், மின்னலை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை விடுக்கும் கருவியை மாநிலத்தில் மூன்று இடங்களில் பொருத்த உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.