ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட திருவேங்கடத்தின் என்கவுன்ட்டருக்கு காவல்துறை விளக்கமளித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில், திருவேங்கடத்திடம் இருந்து ஆயுதங்களை கைப்பற்ற காவல்துறை வாகனத்தில் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அப்போது, இயற்கை உபாதை கழிக்க வேண்டும் எனக்கூறி பாதுகாப்புக்காக இருந்த காவலர்களை தள்ளிவிட்டு திருவேங்கடம் தப்பியோட முயற்சித்ததாகவும் தெரிவித்துள்ளனர்
இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் திருவேங்கடத்தை பிடிக்க முற்பட்டபோது காவலர்களை நோக்கி திருவேங்கடம் துப்பாக்கிச்சூடு நடத்தினார் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனால் தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் ஒருவர் திருவேங்கடத்தை சுட்டபோது, எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்தார் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.