மும்பையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற பின்னர், முதன்முறையாக மும்பை சென்றுள்ளார். மரியாதை நிமித்தமாக இருவரும் சந்தித்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு உடனிருந்தார்.