தேனியில் ஸ்ரீ சிவகணேச கந்த பெருமாள் கோயிலில், மங்கள வாராஹி அம்மனுக்கும், பைரவ மூர்த்திக்கும் திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த கோயிலில் நவராத்திரி பெருவிழா கடந்த 6-ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண விழா நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த வராகி அம்மனுக்கும், பைரவ மூர்த்திக்கும் காப்பு கட்டப்பட்டு திருமண உடைகள் சமர்ப்பிக்கப்பட்டு, மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.
தொடர்ந்து மங்கல வாராகி அம்மனுக்கும் பைரவ மூர்த்திக்கு திருக்கல்யாண வைபவமும், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.