திமுக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது - பிரதமர் மோடி பேச்சு!
Jul 30, 2026, 09:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது – பிரதமர் மோடி பேச்சு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 23, 2026, 05:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மதுராந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ பொதுக்கூட்டத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அப்போது, தமிழகத்தின் சகோதர, சகோதரிகளே வணக்கம் என தமிழில் கூறி உரையை தொடங்கினார்,

வீரமும், நாட்டுப்பற்றும் தமிழக மக்களின் நாடி, நரம்புகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது எனதெரிவித்த பிரதமர், தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் சுபாஷ் சந்திர போஸ் உடன் இணைந்து தேசத்தின் விடுதலைக்காக போராடினர் என்றும் தெரிவித்தார்.

ஊழலில் திளைக்கும் திமுக ஆட்சிக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது என்றும்,
தமிழகத்தில் ஊழலற்ற அரசை NDA கூட்டணி அமைக்கும் என்றும் கூறினார்.

தமிழக மக்கள் பாஜக தலைமையிலான NDA கூட்டணி அரசை விரும்புகிறார்கள் என்றும பிரதமர் தெரிவிததார்.

திமுக அரசிடம் இருந்து தமிழ்நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற முக்கிய நோக்கத்துடன் NDA கூட்டணி தலைவர்கள் இணைந்துள்ளோம் என்றும், திமுக என்றால் CMC…. அதாவது க்ரைம், மாஃபியா, கரப்ஷன் என  பிரதமர் விமர்சித்தார்.

தமிழகத்தில் ஜனநாயகம் இல்லை… நம்பகத்தன்மையும் இல்லை…ஒரே ஒரு குடும்பத்திற்காக மட்டுமே இயங்குகிறது திமுக அரசு என்றும் அவர் சாடினார்.

திமுக அரசில் எத்தனை லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது என்பது குழந்தைக்கு கூட தெரியும் என்றும், தமிழ்நாட்டின் கலாசாரம், ஆன்மிகம் உள்ளிட்டவை தேசத்தின் பெருமைகளாக திகழ்கின்றன என்றும் கூறினார்.

எந்த அளவுக்கு தமிழ்நாடு வேகமாக முன்னேறுகிறதோ…. தேசமும் அந்த அளவுக்கு வேகமாக வளரும் என்றும் அவர் தெரிவித்தார்.

திமுக தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி பின்னோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்கு தேவையான அளவு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் பிரதமர் கூறினார்.

தமிழகத்தில் மீனவர்கள், விவசாயிகளுக்கு NDA கூட்டணி பலமான ஆதரவை வழங்கி வருகிறது என்றும், 11 ஆண்டுகளில் NDA அரசு தமிழகத்தின் வளர்ச்சிக்காக வரலாறு காணாத பணிகளை செயல்படுத்தி இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்

தமிழகத்தில் NDA கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், இரட்டை இன்ஜின் அரசு அமையும் எனறும், போதையில்லா தமிழகத்தை உருவாக்க NDA தலைமையிலான கூட்டணி அரசால் மட்டும்தான் முடியும் அவர் கூறினார்.

திமுகவினருக்கும், போதைப் பொருள் கும்பலுக்கு தொடர்பு உள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் தமிழகத்தில் பெண்கள்
மட்டுமின்றி யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது என்றும் கூறினர்.

NDA அரசின் முத்ரா திட்டத்தால், தமிழக பெண்கள், இளைஞர்கள் பெரும் ஆதாயம் பெற்று வருகின்றனர் என்றும், உலகெங்கும் இருக்கும் முதலீட்டாளர்களின் முதன்மை விருப்பமாக இந்தியா திகழ்கிறது என்றும்  பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

உலகமே இந்தியாவை உற்றுநோக்கும் இந்த தருணத்தில் தமிழ்நாட்டில் இரட்டை இன்ஜின் அரசாங்கம் அமைந்தால் தான் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் குற்றம், ரவுடிகள் அட்டகாசம் கட்டுக்குள் இருந்ததாகவும், தமிழ்நாட்டில் NDA கூட்டணி அரசு ஆட்சியமைத்தால் அனைத்து வீடுகளிலும் குழாய் வழியாக குடிநீர் பாயும் என்றும், . இது தனதுவாக்குறுதி என்றும் கூறினார்.

தமிழ்நாட்டில் NDA கூட்டணி அரசு ஆட்சியமைத்தால் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.

பல மாநில முதலமைச்சர்கள், முக்கிய தலைவர்களுக்கு திருக்குறளை பரிசாக வழங்கி மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன் என்றும்,  தமிழ் கலாசாரத்தை பாராட்டுவது மட்டுமின்றி, அதனை பாதுகாக்க உறுதியாக பணியாற்றுவோம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

கடவுள் முருகனுக்காக மலை மீது தீபம் ஏற்றுவது பாதிக்கப்பட்ட போது குரல் கொடுத்த பாஜக தலைவர்களை பாராட்டுகிறேன் என்றும்,  திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வாக்குவங்கி அரசியலுக்காக திமுக அரசு செயல்பட்டதாக பிரதமர் குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ், திமுக கூட்டணி அரசில் தான் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடைவிதிக்கப்பட்டதாகவும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை மீட்டுக் கொடுத்தது NDA  அரசு என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

தமிழகத்தில் திறமைகளுக்கு குறைவே இல்லை என்றும், இளைஞர்கள் மீது நம்பிக்கை வைக்கும் அரசாங்கம் தான் தமிழ்நாட்டின் தற்போதைய தேவை என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக இளைஞர்களுடன் ஒன்றாக இணைந்து கைகோர்த்து,முன்னேற்றும் அரசாக NDA கூட்டணி அரசு திகழும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

Tags: MK Stalinepsaiadmknda alliancevasannainarMaduranthakamNDA public meetingbjpDMKprime minister narendra modi
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டம் – காசா அமைதி வாரியத்தில் இணைந்ததற்கு எதிர்ப்பு

Next Post

சர்வதேச ரவுடியாக உருவெடுக்கும் “டிரம்ப்” -குவியும் விமர்சனங்கள்

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies