பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பில்லி இபதுல்லா உடல்நலக்குறைவால் காலமானார்.
88-வயதான இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார்.
வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த இவருக்கு இரங்கல் தெரிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.