ராமநாதபுரத்தில் கோதண்டராமர் கோவிலில் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பழமை வாய்ந்த கோதண்ட ராமர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
சுவாமியும், அம்பாளும் சிம்ம வாகனம், இந்திர வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்டவற்றில் வீதி உலா வந்தனர். தொடர்ந்து, சுவாமிக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிலையில், திருத்தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் கோதண்ட ராமரும், சீதா தேவியும் நான்கு ரத வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.