கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே கழிவுநீர் கால்வாயில் மாயமான தூய்மை பணியாளரை தேடும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அமைஞ்சான் கழிவுநீர் ஓடையை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஜோய் என்ற தொழிலாளி கால்வாயில் மாயமான நிலையில், தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அதில் தொய்வு ஏற்பட்டதால் ஸ்கூபா டைவிங் குழு மற்றும் NDRF குழுவினர் இணைந்து ஜோயை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த மனித உரிமை ஆணையம் 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது