தேனி அருகே பட்டப்பகலில் கனிமவள கொள்ளையில் ஈடுபடும் டிரோன் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அல்லிநகரம் பகுதியில் சிவராமன் என்பவரின் கல்குவாரியில், கடந்த சில மாதங்களாக ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் ஹிட்டாச்சி இயந்திரங்கள் உதவியுடன் விடிய விடிய கனிமவளக் கொள்ளை நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் அங்குள்ள பட்டா நிலங்களில், நாள் ஒன்றுக்கு 100க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் வண்டல் மண் மற்றும் கிராவல் மண்ணை சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தகவல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
ஆகையால் பல கோடி ரூபாய் மதிப்புடைய கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருகின்றனர்.