நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்ட ராஜஸ்தானை சேஇருவரை நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
உதகையை சேர்ந்த முரளி என்பவரை தொடர்புகொண்ட மர்ம நபர்கள் சென்னையில் CRPF அதிகாரி ஒருவர் பணி மாறுதல் பெறவுள்ளதாகவும், அவரிடம் உள்ள வீட்டு உபயோகப் பொருட்களை பிறருக்கு கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி, சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை மர்மநபர்கள் வங்கிக் கணக்கில் முரளி செலுத்த சென்றபோது இது மோசடி என்பது தெரியவந்தது.
இதனையடுத்து நீலகிரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் முரளி அளித்த புகாரின்பேரில், ராஜஸ்தானில் பதுங்கியிருந்த வாலக்கா, சோகேல் ஆகிய இருவரையும் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.