மத்திய வெளியுறவு செயலராக விக்ரம் மிஸ்ரி பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஏற்கெனவே வெளியுறவு செயலாளராக இருந்த வினய் மோகன் குவாத்ரா பணி ஓய்வுபெற்ற நிலையில், அந்தப் பொறுப்புக்கு 1989-ஆம் ஆண்டு ஐஎஃப்எஸ் பிரிவு அதிகாரியான விக்ரம் மிஸ்ரியை நியமித்து மத்திய அமைச்சரவை பணி நியமனக் குழு அறிவிக்கை வெளியிட்டது.
அந்த வகையில், அவர் தற்போது வெளியுறவு செயலராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வாழ்த்து தெரிவித்தார்.