டெல்லி மதுபான கொள்கை வழக்கு விசாரணையில் குற்றச்சாட்டு பதிவு தொடர்பான சிபிஐ வாதத்தை வரும் 22-ஆம் தேதி வரை ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
இதேபோல, பாரத ராஷ்டிர சமிதி தலைவர் கே.கவிதா மீதான கூடுதல் குற்றப் பத்திரிகை மீதான பரிசீலனையும் வரும் 22-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமன்றி, இந்த வழக்கில் கைதான நபர்களின் நீதிமன்றக் காவலும் அன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.