புதுச்சேரியில் இம்மாத இறுதியில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதாக துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரி பட்ஜெட்டிற்கு ஓரிரு நாளில் ஒப்புதல் கிடைக்கும் என்றும், இந்த மாத இறுதியில் புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.
மேலும் அமைச்சராக பொறுப்பேற்ற திருமுருகனுக்கு முதல்வர் ரங்கசாமி விரைவில் இலாகா ஒதுக்குவார் என்றும் துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தொடர்ந்து, ரவுடிகள் உருவாகாமல் இருப்பதற்கு அடிப்படையாக கட்ட பஞ்சாயத்து இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ரெட்டியார்பாளையத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அப்புறப்படுத்துமாறு அப்பகுதி மக்கள் வைத்துள்ள கோரிக்கையை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்றும், அதற்கு மாற்றுத்திட்டம் உருவாக்கப்படும் அவர் தெரிவித்தார்.