நாகபுரியில் நேற்று (ஜூலை 14) ராஷ்டிர சேவிகா சமிதியின் அகில பாரத கூட்டம் நடந்தது.
ராஷ்டிர சேவிகா சமிதி என்பது ஆர்எஸ்எஸ்ஸுக்கு இணையான ஒரு தேசியவாத பெண்கள் அமைப்பாகும். ராஷ்டிர சேவிகா சமிதியின் அகில பாரத கூட்டம் நாகபுரியில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் அதன் அகில பாரத தலைவர் சாந்தக்கா கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசியவர்,
தேச நலனை பெருமையாகக் கருதி ஒவ்வொரு நபரும் சிவில் கடமைகளைப் பின்பற்ற வேண்டும். எல்லாவிதமான பிரச்சினைகளையும் தீர்க்க ஒரு தீர்க்கமான சமுதாயத்தை உருவாக்கி அதை செய்ய நமது பணியை அதிகரிக்க வேண்டும்.
லோகமாதா அஹில்யாதேவியின் 300 வது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேவிகா சமிதி 300 நிகழ்ச்சிகள் நடத்தவுள்ளது என்று தெரிவித்தார்.