பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நபரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றதன் மூலம் திமுக அரசு எதையோ மறைக்க முயற்சிப்பதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளரிடம் பேட்டியளித்த அவர், ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளியை என்கவுன்ட்டர் செய்தது திமுக அரசு மற்றும் காவல் துறையின் ஒட்டுமொத்த தோல்வியைக் காட்டுவதாகவும், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு நிலவரம் மோசமான நிலையில் உள்ளதாகவும் விமர்சித்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவினர் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திமுக அரசு எதையோ மறைக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.
இதனால்தான் இந்த வழக்கை சிபிஐக்கு பரிந்துரை செய்ய வேண்டுமென ஏற்கெனவே தாங்கள் வலியுறுத்தியதாகவும், சிபிஐயால் மட்டுமே உண்மையை வெளிக்கொண்டுவர முடியும் என்றும் அவர் கூறினார்.