பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாளை ஒட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
கிண்டியிலுள்ள காமராஜர் நினைவு மண்டபத்தில், அவரது திருவுருவச் சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் மலர்தூவி ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
காமராஜரது நேர்மையும், எளிமையான வாழ்க்கையும் இன்றைய தலைவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும் எனவும், அவரது பணிகள் அனைவருக்கும் உத்வேகமாக உள்ளதெனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார்.