தேனியில் காலநிலை மாற்றம் காரணமாக தக்காளி சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
ஆண்டிப்பட்டி, ஓடைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் கோடை காலத்துக்கு முன்பே அதிகப்படியான வெப்பம் மற்றும் கனமழை காரணமாக தக்காளி சாகுபடி வெகுவாக பாதித்தது.
மேலும் தக்காளி வரத்தும் வெகுவாக குறைந்ததால் 30 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ தக்காளியின் விலை தற்போது 80 ரூபாயாக உயர்ந்துள்ளது.