காமராஜரின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
காமராஜரின் 122வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லி காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.