குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் அகமதாபாத்- வதோதரா விரைவுச் சாலையில் பேருந்தும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
8 பேர் காயமடைந்தனர். அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த போலீஸார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதேபோல மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் அருகே சுமார் 50 பேர் பயணித்த அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 4 பேர் காயமடைந்தனர். இந்த இரு விபத்து தொடர்பாக அந்தந்த பகுதி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.