விவாகரத்து வழக்கில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் மனைவி பயாலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உமர் அப்துல்லா, பயால் தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக இருவரும் பிரிந்துவாழும் நிலையில், முறைப்படி விவாகரத்து கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் உமர் அப்துல்லா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், உமர் அப்துல்லாவின் மனைவி பயால் பதிலளிக்குமாறு கூறி, அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.