திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை வரலட்சுமி செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நடிகை வரலட்சுமி, சினிமாவை தனது உயிராக நினைப்பதாகவும், திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து பேசிய நடிகர் சரத்குமார், இறைவனின் அருளால் வரலட்சுமியின் திருமணம் நல்லபடியாக முடிந்ததாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், சாதாரண நடிகனாக இருந்த தன்னை சுப்ரீம் ஸ்டாராக உயர்த்திய ரசிகர்களுக்கு நன்றி எனத் தெரிவித்தார்.