நாமக்கல் மாவட்டத்தில் அமையவுள்ள சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர் உள்ளிட்ட பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
ஆனால், இங்கு தொழிற்பேட்டை அமைந்தால் விவசாய நிலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்படையும் என்பதால் சிப்காட் தொழிற்பேட்டைக்கு எதிர்ப்பு தெரிவித்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மனுக்க அளித்தனர்.
இந்த மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், மன உளைச்சல் அடைந்த விவசாயிகள் தினந்தோறும் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.