ஜம்மு-காஷ்மீரில் சந்தேகத்துக்கு இடமாக சிலரது நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், ட்ரோனா மூலம் சிஆர்பிஎஃப் வீரர்களும், போலீஸாரும் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அக்னூரில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் அப்பகுதியில் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டுள்ள சிஆர்பிஎஃப் வீரர்கள், ட்ரோனை பயன்படுத்தி கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.