நீலகிரி மாவட்டம் உதகையில் இரவு நேரத்தில், இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடப்படுவதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து, உதனை நகர் மற்றும் பெர்ன்ஹில் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் இரண்டு இளைஞர்கள் பெட்ரோல் திருட்டில் ஈடுபடுவது தெரியவந்தது.
பெட்ரோல் திடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.