மதுரை மாவட்டம், மேலூர் அருகே ஆண்டிச்சாமி கோவிலில், கறி விருந்து திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கீழையூரில் பிரசித்தி பெற்ற ஆண்டிச்சாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 27-வருடங்களுக்கு பிறகு கறி விருந்து திருவிழா நடைபெற்றது.
முன்னதாக, மூலவர் ஆண்டிச்சாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது.
விழாவில், தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட வெளிமாநில பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.