வங்கக் கடலில் மீனவர் வலையில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருந்த அரியவகை இரண்டு ஆலிவ் ரிட்லி ஆமைகளை கடற்படையினர் மீட்டு, மீண்டும் கடலில் பத்திரமாக விடுவித்தனர்.
கொல்கத்தாவிலிருந்து 35 கடல்மைல் தொலைவில் வங்கக் கடலில். கடற்படை வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மீனவர் வலையில் சிக்கி இரண்டு அரியவகை ஆலிவ் ரிட்லி ஆமைகள் தத்ததளித்துக் கொண்டிருந்தன. அவற்றை பத்திரமாக மீட்டு ஆசுவாசப்படுத்திய கடற்படை வீரர்கள், மீண்டும் கடலில் விடுவித்தனர்.