டெல்லியில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அலுவலகத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா ஆய்வு நடத்தினார்.
அப்போது அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கினார். முன்னதாக, தாய் பெயரில் மரக்கன்று நடும் திட்டத்தின்கீழ், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அலுவலகத்தில் மரக்கன்றை மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா நட்டுவைத்தார்.