இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கேட்டு ஹர்பஜன் சிங் தனது எக்ஸ் தலத்தில் பதிவிட்டுள்ளார்.
இவ்வழக்கில் மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்வதாக கூறப்படும் வீடியோவை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் நீக்கம் செய்துள்ளார்.
யாருடையை மனதை புண்படுத்தும் நோக்கில் அந்த வீடியோவை வெளியிடவில்லை எனவும் தொடர்ந்து 15 நாட்கள் விளையாடியதால் எங்களது உடல்நிலை எந்த அளவுக்கு சோர்ந்து போயிருக்கும் என்பதை பிரதிபலிக்கும் வகையிலேயே இந்த வீடியோவை வெளியிட்டோம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் யாருடைய மனதையும் காயப்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்’ என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.