குடியரசு கட்சியின் சார்பில் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளரை முன்னாள் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். எனவே அவர் நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் பிரசாரம் மேற்கொண்ட போது அவரை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் உயிர் தப்பினார். இந்நிலையில், ஒஹியோ சென்றிருந்த டிரம்ப், அம்மாகாண செனட்டர் ஜேம்ஸ் டேவிட் வென்சியை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.