விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 14 ஆயிரத்து 800 ரூபாயை லஞ்சஒழிப்புத்துறையினர் கைப்பற்றினர்.
சேத்தூரில் உள்ள அலுவலகத்தில் வலுக்கட்டாயமாக லஞ்சம் பெறுவதாக லஞ்சஒழிப்புத்துறையினருக்கு புகார்கள் வந்தன, அதன் பேரில் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது கணக்கில் வராத 14 ஆயிரத்து 800 ரூபாய் இருந்தது கண்டுடிக்கப்பட்டது. இதனையடுத்து பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.