தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
மின்கட்டண உயர்வு மூலம் மின் வாரியத்திற்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
மின்கட்டண உயர்வு, விக்கிரவாண்டி தேர்தல் முடிவடைந்த பிறகு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டு நிலையில், மின்சார வாரியத்தின் இழப்பு குறைவதற்கு பதிலாக அதிகரித்திருப்பதாகவும், மின்சார வாரியத்தில் நிலவும் ஊழலை களையாமல் மின்சாரக் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதால் எந்தப் பயனும் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.