டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சந்தித்தார்.
டெல்லியில் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரதமர் நரேந்திர மோடியை சத்தித்து, தமிழகத்தில் தற்போது நிலவும் சூழலை எடுத்து கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழ்நாட்டு மக்கள் சேவையில் அவரது அக்கறை, தொலைநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டுதலின் பலனைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.